TN New Secretariat| புதிய தலைமை செயலகத்திற்கு சிட்டிக்கு உள்ளே புதிய இடம் கண்டுபிடிப்பு
#newsecretariat #tnsecretariat #cmvijay
புதிய தலைமைச் செயலகம்-நந்தனம் நிலத்தைப் பயன்படுத்த பரிந்துரை சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க, நந்தனத்தில் உள்ள 80 ஏக்கர் அரசு நிலத்தைப் பயன்படுத்தலாம் என நகரமைப்பு வல்லுநர்கள் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளனர். தற்போது , புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வரும் சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்தில் இடநெருக்கடி அதிகரித்து வருவதால், மாற்று இடத்தில் புதிய வளாகம் அமைக்க அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்காக பட்டினப்பாக்கம் வீட்டுவசதி வாரிய நிலம், பல்லவன் இல்லம், தீவுத்திடல் உள்ளிட்ட இடங்கள் பரிசீலிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், அண்ணா சாலையில் நந்தனத்தில் உள்ள 80 புள்ளி 40 ஏக்கர் அரசு நிலத்தைப் பயன்படுத்தலாம் எனத் தொழில்முறை நகரமைப்பு வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 1936-ஆம் ஆண்டு கோல்ஃப் மைதானப் பயன்பாட்டுக்காகக் குத்தகைக்கு விடப்பட்ட இந்த நிலத்தின் குத்தகைக் காலம் முடிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை மீண்டும் அரசின் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதுடன், அண்ணா சாலையில் இரண்டு அல்லது மூன்று நுழைவாயில்களை அமைக்கவும், அடையாற்றின் குறுக்கே பாலம் அமைத்து கோட்டூர்புரத்துடன் இணைக்கவும் வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் மற்றும் மூத்த அமைச்சர்களுக்கு விரிவான அறிக்கையுடன் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
