நீலகிரி மாவட்டம், குன்னுார் சிம்ஸ் பூங்காவில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், அரிய மலர்கள் நடவு செய்யப்படுகிறது. இந்நிலையில், முதல் முறையாக நடவு செய்யப்பட்ட அகப்பான்தஸ், அமரல்லீஸ் உள்ளிட்ட வெளிநாட்டு மலர்கள் பூக்க துவங்கியுள்ளன. இது சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்துள்ளது. டான்சிங் டால் எனப்படும் ப்யூசியா மலர்கள் பூக்க துவங்கியதால் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் போட்டோ எடுத்து செல்கின்றனர்.