திருச்செந்தூர் கோயிலில் வந்த புது வசதி - பக்தர்கள் நல்ல வரவேற்பு
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கைப்பேசி பாதுகாக்கும் அறை தொடக்கம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்காக கைபேசிகள் பாதுகாக்கும் சிறப்பு அறை தொடங்கப்பட்டுள்ளது. கோவிலில் செல்போன்களை பாதுகாப்பதற்கான வசதி முன்பு இல்லாததால் பக்தர்கள் சிரமம் அடைந்து வந்தனர். இந்த குறையை சரிசெய்யும் வகையில், தற்போது 300 லாக்கர்களுடன் கைப்பேசி பாதுகாப்பு அறை செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு லாக்கரிலும் 10 கைப்பேசிகள் வரை வைக்கலாம் என்றும், ஒரு கைப்பேசிக்கு 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. எனவே இந்த ஏற்பாடு பக்தர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Next Story
