Nellai | தடயத்தை அழிக்க திருடிய வீட்டிலேயே தீ வைத்த கொடூரன் - நெல்லையில் நடுங்கிவிட்ட கிரைம்

x

பணத்தை திருடி விட்டு பீரோவை கொளுத்தி விட்டு சென்ற திருடன்

நெல்லை மாவட்டத்தில் வீடு ஒன்றில் கொள்ளையடித்துவிட்டு தடயங்களை அழிக்க பீரோவை கொளுத்தி விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள அயன் சிங்கம்பட்டியை சேர்ந்த சண்முகவேல் மற்றும் அவரது மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது.

வீட்டில் இருந்து புகை வருவதை கண்ட அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் வீட்டின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர்.உள்ளே வந்த பார்த்த போது பீரோவில் இருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம் திருடுபோனது தெரிய வந்தது.பணத்தை திருடியவர் பீரோவை தீவைத்து கொளுத்தி விட்டு பின்வாசல் வழியாக தப்பிச்சென்றதும் தெரிய வந்துள்ளது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார்,கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்