சிறுவனை அடித்து கொன்ற தாயின் கள்ளக்காதலன் கைது

நெல்லையில் தாயின் கள்ளக்காதலன் 4 வயது சிறுவனை அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவனை அடித்து கொன்ற தாயின் கள்ளக்காதலன் கைது
Published on

நெல்லை மாவட்டம் விக்ரமசிங்கபுரம் அருகே உள்ள டாணா பகுதியை சேர்ந்தவர் தீபா. அந்த பெண்ணுக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் சொரிமுத்து என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாகவும், இதை தீபாவின் கணவர் அந்தோணி பிரகாஷ் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தனது 4 வயது மகன் மற்றும் கள்ளக்காதலன் சொரிமுத்துவுடன் நெல்லை சென்ற தீபா விடுதியில் தங்கியுள்ளார்.

அவரது கணவர் அந்தோணி பிரகாஷ் போன் செய்த போது தீபா கள்ளக்காதலனுடன் இருப்பது மகன் மூலம் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் சொரிமுத்து சரமாரியாக தாக்கியதில் , மூச்சு திணறி மயக்கமடைந்த அந்த சிறுவன் மருத்துவமனையில் இறந்து போனான். இதையடுத்து தீபாவை கைது செய்த போலீசார், விசாரணைக்கு பிறகு விடுவித்தனர். தலைமறைவாக இருந்த கள்ளகாதலன் சொரிமுத்துவை போலீசார் நெல்லை அருகே கைது செய்தனர்

X

Thanthi TV
www.thanthitv.com