மின்தடையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீட் மறு தேர்வு..? -வெளியான முக்கிய அறிவிப்பு

x

மின்தடையால் பாதிக்கப்பட்ட 75 மாணவர்களுக்கு நீட் மறுதேர்வுக்கு விதித்த இடைக்கால தடையை எதிர்த்த மனுவை 25ம்தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர், உஜ்ஜைன் உள்ளிட்ட நகரங்களில் நீட் தேர்வு எழுதிய சில மாணவர்கள், தேர்வு மையங்களில் மின் தடை ஏற்பட்டதால் தங்களால் சரியாக தேர்வு எழுத முடியவில்லை என மறுதேர்வு நடத்த உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவை விசாரித்த மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற தனி நீதிபதி, மறு தேர்வு நடத்த உத்தரவிட்டார்.

தனிநீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தேசிய தேர்வுகள் முகமை மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு நீட் மறு தேர்வு நடத்த பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

இதனிடையே நீட் கலந்தாய்வுக்கு இடைக்கால தடை கோரிய மனுவை அவசர மனுவாக விசாரிக்கவும், அதுவரை நீட் கலந்தாய்வு நடத்த தடை விதிக்கவும் கோரி முன்வைத்த முறையீட்டை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

மேலும் மின்தடையால் பாதிக்கப்பட்ட 75 மாணவர்களுக்கு நீட் மறுதேர்வுக்கு இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை வரும் 25ம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்