நீட் தேர்வு : இடம் மாற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தார் நீதிபதி

நீட் தேர்வு ஆள்மாறாட்ட புகார் தொடர்பாக, தேனி, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 இடம் காலியாக உள்ளது என்றும், எனவே, தன்னை தேனி அல்லது தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரிக்கு இடம் மாற்ற வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தார்.
நீட் தேர்வு : இடம் மாற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தார் நீதிபதி
Published on

தூத்துக்குடியைச் சேர்ந்த யாமினி, மதுரையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவம் படித்து வருகிறார். அவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், நீட் தேர்வு ஆள்மாறாட்ட புகார் தொடர்பாக, தேனி, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 இடம் காலியாக உள்ளது என்றும், எனவே, தன்னை தேனி அல்லது தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரிக்கு இடம் மாற்ற வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி எம்.சுந்தர், முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், கடந்த ஆகஸ்ட் 31-க்கு பிறகு காலியாகும் மருத்துவ இடங்களுக்கு அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com