

நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரத்தில், சென்னை தனியார் மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அவரது தாயாரையும் சென்னைக்கு வந்து கைது செய்த சிபிசிஐடி போலீசார் இருவரையும் தேனிக்கு அழைத்து சென்றனர். அங்கு விசாரணை நடத்திய சிபிசிஐடி அதிகாரிகள் பின்னர், தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை நடத்தினர். பின்னர் இருவரும் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற நடுவர் பன்னீர்செல்வம் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.