நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - திமுக எம்.பி.கலாநிதி வீராசாமி

மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முன் வர வேண்டும் என, மக்களவையில் தி.மு.க. எம்.பி. கலாநிதி வீராசாமி கோரிக்கை விடுத்தார்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - திமுக எம்.பி.கலாநிதி வீராசாமி
Published on
மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முன் வர வேண்டும் என, மக்களவையில் தி.மு.க. எம்.பி. கலாநிதி வீராசாமி கோரிக்கை விடுத்தார். மக்களவையில், அவர் முதல்முறையாக உரையாற்றினார். அப்போது நீட் தேர்வு குறித்து பேசியவர், பள்ளி மாணவர்களின் கல்வி கற்கும் திறனை எளிதாக்கும் வகையில் கலைஞரின் ஆட்சியில் சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டதாக கூறினார். ஆனால், தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வால், தமிழகத்தில், மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு சென்றிருப்பதாக மக்களவையில் கூறினார். எனவே அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் கலாநிதி வீராசாமி வலியுறுத்தினார்.
X

Thanthi TV
www.thanthitv.com