நீட் தேர்வு எழுதிவிட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம் - மாற்றுத்திறனாளி மாணவி திடீர் மரணம்

மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் நீட் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பும் போது திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு எழுதிவிட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம் - மாற்றுத்திறனாளி மாணவி திடீர் மரணம்
Published on
மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் நீட் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பும் போது திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பாப்பனம் என்ற பகுதியை சேர்ந்தவர் சந்தியா. மாற்றுத்திறனாளி மாணவியான சந்தியா, மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வு எழுதியுள்ளார். தேர்வுக்கு பின், ராமநாதபுரம் திரும்பி கொண்டிருந்த மாணவி, திருபுவனம் அருகே வந்த போது திடீரென உடல் நிலை மோசமாகியுள்ளது. இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனைக்கு மாணவியை கொண்டு சென்றபோது, செல்லும் வழியிலே மாணவி, பரிதாபமாக உயிரிழந்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com