

சேலம் முதல் கரூர் வரையிலான ரயில் பாதை அமைக்கும் பணிக்காக விவசாயிகள் தங்கள் நிலத்தை கொடுத்திருந்தனர். இதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இழப்பீடு வழங்க உத்தரவிட்டும் வழங்கப்படாததால் ராசிபுரத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ரயில்வே அலுவலகத்தில் இருந்து பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராசிபுரம் தாசில்தார் அலுலவலகத்தில் உள்ள பொருட்களை நீதிமன்ற ஊழியர் ஜப்தி செய்தனர்.