"கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சீஷா தொண்டு நிறுவனம் சார்பில் 22 வீடுகள்"

நாகை மாவட்டத்தில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளை சீஷா தொண்டு நிறுவன தலைவர் பால் தினகரன் வழங்கினார்.
"கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சீஷா தொண்டு நிறுவனம் சார்பில் 22 வீடுகள்"
Published on
நாகை மாவட்டத்தில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளை சீஷா தொண்டு நிறுவன தலைவர் பால் தினகரன் வழங்கினார். ஆலங்குடியை அடுத்த தோப்படித்தெரு கிராமத்தில் சீஷா தொண்டு நிறுவனம் சார்பில் சுமார் 55 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 22 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் 22 பேருக்கு வீட்டின் சாவிகளை பால் தினகரன் வழங்கினார். முதல்கட்டமாக ஆலங்குடி தேரடி தெரு, ஐயூர் ஆகிய கிராமங்களை தத்தெடுத்து 3 கோடி ரூபாய் மதிப்பில் 100 வீடுகள் கட்டப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com