Nagai - srilanka || நாகை - இலங்கை கப்பல் சேவை வரும் 18ம் தேதி வரை நிறுத்தம்
கடல் சீற்றம் மற்றும் சூறைக்காற்று காரணமாக நாகை, இலங்கை இடையிலான பன்னாட்டு பயணியர் கப்பல் சேவை, வரும் 18ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய வங்க கடல் பகுதிகளில் வரும் 17ஆம் தேதி வரை, சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வரை வீசுவதுடன், கடல் கொந்தளிப்பு ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதன் காரணமாக நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.
Next Story
