Nagai | Rocket | நாகையில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்.. பீதியில் ஊர் மக்கள்
நாகை மாவட்டம் கீழையூர் பகுதியில் ராக்கெட் போன்ற மர்ம பொருள் ஒன்று கடற்கரையில் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கீழையூர் அருகே பிரதாபராமபுரம் கடற்கரையில், இன்று காலை ராக்கெட் போன்ற மர்ம பொருள் கரை ஒதுங்கியது.
இதில், "MADE IN USA" என எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து அப்பகுதி மக்களிடையே அச்சமும் பரபரப்பும் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், அந்த மர்ம பொருளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து, கரைஒதுங்கிய மர்ம பொருளை பாதுகாப்புடன் ஆய்வகத்திற்கு எடுத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
