Chengalpattu | Fire | 4000 ஆண்டு பழமையான சிவன் கோயிலுக்கு தீ வைத்த மர்மநபர் - அதிர்ச்சி காரணம்

x

செங்கல்பட்டு அருகே 4000 ஆண்டுகள் பழமையான கோவிலுக்கு மர்ம நபர் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு அருகே, திருட வந்த இடத்தில் நகை மற்றும் பணம் கிடைக்காத விரக்தியில், மர்மநபர் ஒருவர் சுமார் 4000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேம்பாக்கம் பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில், ஆருத்ரா தரிசன பூஜைகள் முடிந்து நிலையில், அதிகாலை கோவிலைத் திறக்க வந்தனர். அப்போது, கோவில் உள்ளே இருந்த பொருட்கள் தீயில் கருகியிருந்தது தெரியவந்தது. இதில் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதுடன், சில சிலைகள் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்