தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிவடைந்த நகர்மன்ற கூட்டம் - பரபரப்பு
கூச்சல், குழப்பம் - சில நிமிடத்தில் நகர்மன்ற கூட்டம் நிறைவு
ராமநாதபுரம் நகர்மன்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம் காரணமாக துவங்கிய சில நிமிடங்களிலேயே கூட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
நகர்மன்ற கூட்டம் நகர் மன்ற தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பாஜக கவுன்சிலர் குமார், புதிய பேருந்து நிலைய கடைகள் ஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு திமுக கவுன்சிலர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, அவரை பேச விடாமல் மேஜையை தட்டினர். தொடர்ந்து அவரை சூழ்ந்து கொண்டு அவரை பேச விடாமல் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியதுடன், தேசிய கீதம் பாடப்பட்டு நகர்மன்ற கூட்டத்தை சில வினாடிகளிலேயே முடித்தனர்.
Next Story
