தனியார் வங்கியை மொட்டை போட்ட அம்மா மகன் Fraud கூட்டணி - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

x

பணம் கையாடல் - தனியார் வங்கி விற்பனை மேலாளர் உட்பட இருவர் கைது

சென்னையில் உள்ள தனியார் வங்கியில், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பணம் கையாடல் செய்த வழக்கில், விற்பனை மேலாளர் மற்றும் அவரது தாயாரை போலீசார் கைது செய்தனர். அமைந்தகரையில் உள்ள வங்கிக்கிளையில், மண்டல மேலாளர் வெங்கடேசன் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் போ​லீசார் விசாரணை நடத்தினர். இதில், அந்த வங்கிக்கிளையில் பணியாற்றிய திருவொற்றியூரை சேர்ந்த விற்பனை மேலாளர் மகேந்திரகுமார் மற்றும் அவரது தாயார் விஜயலட்சுமியை கைது செய்தனர். இவர்கள் வங்கி மற்றும் பொதுமக்களின் பணத்தை கையாடல் செய்து, சட்டவிரோதமாக, சுமார் ஒரு கோடியே 76 லட்சம் ரூபாய் சுயலாபம் அடைந்தது விசாரணையில் தெரியவந்தது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்