

பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பான, நடவடிக்கைகளுக்காக தமிழக அரசு 7 கோடியே 65 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை அடுத்த சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள 51 இடங்களை தேர்வு செய்து அங்குள்ள குப்பைகளை அகற்றுதல், மிதக்கும் திடக்கழிவுகளை தூர் வாருதல், அடைப்புகளை சரி செய்தல் போன்ற பணிகளில் அதிகாரிகள் உடனடியாக ஈடுபடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக 7 கோடியே 65 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பருவ மழைக்கு முன்பாக பணிகளை முடிக்கவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
==