

பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? என்று, தர்மபுரி இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், தர்மபுரியில் பாலியல் வன்கொடுமை மூலம் 17 வயது இளம்பெண் உயிரிழந்த கொடூரச் செய்தியறிந்து துயருற்றதாகவும், மனிதம் வக்ரம் அடைந்து வருவது பெரும் வேதனை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதற்குக் காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.