மாயமான மாரியம்மன் கோவில் விக்ரகங்கள் | நெல்லையில் பரபரப்பு
மாரியம்மன் கோவில் விக்ரகங்கள் மாயம் - கிராம மக்கள் புகார்
நெல்லை மாவட்டம் திருப்பணி கரிசல்குளத்தில் உள்ள மாரியம்மன் கோவில் விக்ரகங்கள் மாயமானதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கொடை விழாவின் போது களிமண் உள்ளிட்ட பொருட்களால் செய்யப்பட்ட விக்ரகங்கள், விழா முடிந்து வயல்வெளியில் சிலை வைக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. கடந்த வியாழக்கிழமை சிலைகள் காணமால் போனதாக கோவில் பூசாரி, கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பிரசித்தி பெற்ற கோவில் சிலைகள் காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
