மாயமான மூதாட்டி.. கிடைத்த மண்டை ஓடு - அருகே கிடந்த அதிர்ச்சி ஆதாரம்
திருவள்ளூர் அருகே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாயமான மூதாட்டி மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வெங்கல் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சரோஜா என்ற மூதாட்டி கடந்த ஆண்டு டிசம்பர் 3ம் தேதி மாயமனார்.இது குறித்து அவரது மகன் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் வெங்கல் குப்பம் ஏரிக்கரையில் மண்டை ஓடு ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தியதில் மாயமான சரோஜாவின் செல்போன், 100 நாள் வேலை அட்டை உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது இதையடுத்து அவரது விலா எலும்புகள் மற்றும் மண்டை ஓடு ஆகியவற்றை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story
