ரூ. 265 கோடியில் 223 சமுதாய கூடங்கள் கட்டப்பட்டுள்ளது - அமைச்சர் வேலுமணி

தமிழகத்தில் 265 கோடி ரூபாய் செலவில் 223 சமுதாயக் கூடங்கள் கட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
ரூ. 265 கோடியில் 223 சமுதாய கூடங்கள் கட்டப்பட்டுள்ளது - அமைச்சர் வேலுமணி
Published on
தமிழகத்தில் 265 கோடி ரூபாய் செலவில் 223 சமுதாயக் கூடங்கள் கட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது வேடசந்தூர் எம்.எல்.ஏ பரமசிவம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் வேலுமணி இதனை தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் , நகராட்சிகளில் ஏற்கனவே 35 கோடி ரூபாயில் 172 சமுதாய நலக்கூடங்கள் கட்டி தரப்பட்டதாக அவர் கூறினார். முதலமைச்சர் பழனிசாமியின் உத்தரவின் பேரில் 16 கோடி ரூபாயில் தற்போது 45 சமுதாய நலக்கூடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com