பக்தர்கள் நெஞ்சை குளிர வைத்த அமைச்சர் சேகர்பாபு
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பவானிஅம்மன் கோவிலில் பெண் பக்தர்களுக்கு மங்கலப்பொருட்களை வழங்கும் திட்டத்தை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். ஆடி மாதம் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 5 அம்மன் ஆலயங்களில் பெண் பக்தர்களுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கப்படும் என்ற சட்டமன்ற அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த அவர், பெண் பக்தர்களுக்கு கூழ் வார்த்து, மங்கலப் பொருட்களை வழங்கினார்.
Next Story
