"7,800 பள்ளிகள் ஸ்மார்ட் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன்

செப்டம்பர் 15-க்குள் 9 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை வகுப்புகள் கணினி மயமாக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
"7,800 பள்ளிகள் ஸ்மார்ட் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன்
Published on

செப்டம்பர் 15-க்குள் 9 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை வகுப்புகள் கணினி மயமாக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை அடுத்த திருநின்றவூரில் உள்ள தாசர் அரசு உதவி பெரும் பள்ளி நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும், உயர்நிலைப் பள்ளிகளில் டேப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 6 முதல் 8 வரை உள்ள மாணவர்களுக்கு என புதிய திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். செப்டம்பர் இறுதிக்குள் ஏழாயிரத்து 800 பள்ளிகள் ஸ்மார்ட் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்றும், 6 முதல் 12 வரை உள்ள மாணவர்களுக்கு ஷூ (shoe)வழங்க முடிவெடுத்து உள்ளதாகவும், இது விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com