Kodaikanal | Road Accident | கொடைக்கானலில் பள்ளத்தில் கவிழ்ந்த மினிவேன் - 8 பேர் காயம்
கொடைக்கானலில் பள்ளத்தில் கவிழ்ந்த மினிவேன் - 8 பேர் காயம்
Kodaikanal | Road Accident | கொடைக்கானலில் பள்ளத்தில் கவிழ்ந்த மினிவேன் - 8 பேர் காயம்
#Dindigul #Kodaikanal #RoadAccident #TNPolice
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில், வனப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கொடைக்கானல் 12 மைல் சுற்றுலாத் தலங்களில் பணிபுரியும் 8 ஊழியர்களை பணிக்கு அழைத்துச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பாம்பார் பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
