நள்ளிரவில் ஆவடியை அதிரவைத்த போராட்டம்.. ரோடு பிளாக்.. படாத பாடுபட்ட போலீஸ்
மின்வெட்டை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
சென்னையை அடுத்த ஆவடி அருகே நள்ளிரவில் மின்வெட்டை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அண்ணனூர் அன்னை சத்யா நகர் பகுதியில் மாலையில் பெய்த கனமழையால், மின்தடை ஏற்பட்டுள்ளது. பின்னர், மின்சாரம் வழங்காததால், மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்ட அப்பகுதி மக்கள், அழைப்பை ஏற்கவில்லை என்றும், அலட்சியமாக பதிலளிப்பதாகவும் குற்றம் சாட்டினர். இதையடுத்து, அயப்பாக்கம் அண்ணனூர் சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் ஏற்காமல் ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி, போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தினர்.