இந்த தேதிகளில் மழை கொட்டி தீர்க்க போகுது வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே 3ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.இதனால்
தமிழகம், மற்றும் புதுச்சேரியில் வரும் 28ஆம் தேதி முதல் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சில இடங்களில் வெப்ப நிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
