தவெக போராட்டத்தில் ஆர்வமாக கூடிய பெரும் கூட்டம் - அடுத்தடுத்து 25 பேர் மயக்கம்
தவெக போராட்டத்தில் ஆர்வமாக கூடிய பெரும் கூட்டம் - அடுத்தடுத்து 25 பேர் மயக்கம்
சென்னையில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் ஆர்ப்பாட்டத்தில், 25க்கும் மேற்பட்ட பெண்கள், இளைஞர்கள் மயக்கமடைந்தனர்.
திருப்புவனம் அஜித்குமார் மரணமடைந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் த.வெ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக வெற்றிக்கழகம் தொடங்கி சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆகும் நிலையில், முதன்முறையாக விஜய் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையொட்டி
பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சித் தொண்டர்கள் வந்திருந்தனர்.
இந்நிலையில், வெப்பம் காரணமாக பெண்கள், இளைஞர்கள் என, 25க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Next Story
