மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி கட்டிட வளாகத்தினுள் பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து திருமண மண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தொகுதி MLA -வும், வருவாய் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமாரின் ஆதரவாளர்கள் இந்த கட்டிட பணியை மேற்கொள்வதால் , இதற்கு எதிராக முறையிட்டும் எந்த பயனுமில்லை என கிராம மக்கள் கூறுகின்றனர். திருமண மண்டபத்தினால் மாணவர்களுக்கு கல்வி கற்பதில் இடையூறு ஏற்படும் என்றும், மாணவிகளுக்கு பாதுகாப்பில்லாத சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனை வேறு இடத்திற்கு மாற்ற அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் இது தொடர்பாக புகார் அளிக்க வேண்டிய பள்ளி தலைமை ஆசிரியர் அமைச்சருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், பொதுமக்கள் புகார் செய்தல் ஆளுங்கட்சியினர் மிரட்டுவதாகவும் கூறினர்.