இளம்பெண்ணை சீரழித்து துபாயில் செட்டில்.. 5 ஆண்டுக்கு பிறகு செஞ்சுவிட்ட கர்மா
இளம்பெண்ணை சீரழித்து துபாயில் செட்டில் .. 5 ஆண்டுக்கு பிறகு காத்திருந்து செஞ்சுவிட்ட கர்மா.. தூக்கம் தொலைத்த சென்னை இளைஞர்
ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியவர் 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார். சென்னையை சேர்ந்த இளம் பெண்ணை கடலூரை சேர்ந்த முகமது, திருமணம் செய்து கொள்வதாக கூறி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.பின்னர் முகமது வேலை செய்ய போவதாக கூறி துபாய் சென்ற நிலையில் அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டதையறிந்த இளம்பெண், முகமத்தின் தாயாரிடம் கேட்டபோது 5 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என்றும், இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட இளம்பெண் கடந்த 2020 ஆம் ஆண்டு வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், முகமதுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கி விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் துபாயில் இருந்து சென்னை வந்த முகமது கைது செய்யப்பட்டார்.
