

வேட்டவலம் கோட்டை அருகே உள்ள மனோன்மனியம்மன் ஆலயத்தில், கடந்த 2017 ஆம் ஆண்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரையடி பச்சை மரகலிங்கம் மற்றும் அம்மன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில் இரண்டு ஆண்டுகளாக கொள்ளையர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் தவித்து வந்த நிலையில், ஜமீன் பங்களாவில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் காணாமல் போன மரகத லிங்கம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, கொள்ளையடிக்கப்பட்ட சிலையை திருப்பி கொண்டு வந்து வைத்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்