கொடைக்கானலில் முக்கியமான இடங்களுக்கு மூடுவிழா: பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்க முன்னோட்டமா?

கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்கள் படிப்படியாக மூடப்படுவதால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளதோடு, சுற்றுலா பயணிகளின் வருகை குறையும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானலில் முக்கியமான இடங்களுக்கு மூடுவிழா: பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்க முன்னோட்டமா?
Published on
கொடைக்கானலில் ஓராண்டுக்கு முன்பு குண்டாறு பகுதியில் உள்ள பைன் மரக்காடுகள் மூடப்பட்ட நிலையில் தற்போது மயிலாடும்பாறை பகுதி சூழல் சுற்றுலா மையம், நாவல் மரங்கள் அமைந்துள்ள பகுதி, கரடிச்சோலை நீர் வீழ்ச்சி ஆகிய சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்து செல்கின்றனர். ஏற்கனவே 300க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் மூடப்பட்ட நிலையில் தற்போது முக்கியமான சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு வருவதால் கொடைக்கானல் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com