நாயை ஏர்கன் மூலம் சுட்ட நபர் - போலீசார் விளக்கம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, இரவு நேரத்தில், தெருநாய் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஏர்கன் மூலம் சுட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவிய நிலையில், காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஏர்கன் மூலம் சுட்ட நபர் பட்டணம் பகுதியை சேர்ந்த வினோத் மற்றும் அவரது மனைவி தேவி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். வெறி நாய் ஒன்று தங்களது குழந்தைகளை கடிக்க வந்ததற்காக, அவர்கள் உள்ளுர் நபரிடமிருந்து ஏர்கன் ஒன்றை கடன் வாங்கி அந்த நாயை நோக்கி சுட்டதாகத் தெரியவருகிறது.
இதில் அந்த நாய்க்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
Next Story
