திடீரென மயங்கி விழுந்து பலியான இளைஞர்.. கதறி அழும் பெற்றோர்... நெல்லையில் அதிர்ச்சி
நெல்லை ரயில் நிலையம் முன்பு நடந்து வந்த 24 வயது இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வள்ளியூர் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த ஏழுமலைக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. குடும்பத்துடன் தென்காசிக்கு சென்ற அவர் ரயில் மூலம் நெல்லை வந்துள்ளார். அப்போது திடீரென சாலையில் மயங்கி விழுந்த அவரை பரிசோதித்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தனர். வெயிலின் தாக்கம் காரணமாக ஏழுமலை உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
