பூக்குழியில் தவறி விழுந்து பலியான நபர் - அதிர்ச்சி காட்சிகள்
ராமநாதபுரம் அருகே குயவன்குடி பகுதியில் உள்ள சுப்பையா கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி, நடைபெற்ற பூக்குழி திருவிழாவில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது தெற்கு காட்டூர் பகுதியைச் சேர்ந்த கேசவன் என்ற பக்தர் பூக்குழியில் இறங்கியபோது, எதிர்பாராத விதமாக பூக்குழியில் தவறி விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Next Story