புது நோட்டிலும் ஒழியாத கள்ள நோட்டு `பெரிய தல’ எஸ்கேப்.. சிக்கிய `துருப்பு’..

x

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கள்ளநோட்டு வழக்கில் தலைமறைவாகி உள்ள செல்வத்திற்கு உதவி செய்ததாகக் கூறி, கமல் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திட்டக்குடியை அடுத்துள்ள அதர்நத்தம் கிராமத்தில் பண்ணை வீட்டில் கள்ளநோட்டு அச்சடித்த வழக்கில் தலைமறைவாகி இருந்த செல்வத்திடம், சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த கமல் குமார், ஆவட்டி கூட்டு ரோட்டில் வைத்து, சொகுசு கார், லேப்டாப் மற்றும் செல்போனை கொண்டு கொடுக்க முயன்ற போது, போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, கமல்குமாரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்