பாறைக்குழியில் விழுந்த சிறுவன்..உள்ளே இறங்கினால் 40 வயது ஆண் சடலம்... அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

x

திருப்பூரில் பாறைக்குழிக்குள் விழுந்ததாக சொல்லபட்ட சிறுவனின் உடலை தேடிய போது, 40 வயது மதிக்க தக்க ஆண் சடலம் கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட குருவாயூரப்பன் நகர் பகுதியில் உள்ள பாறைக்குழியில் சிறுவன் ஒருவன் விழுந்து விட்டதாக தகவல் பரவியுள்ளது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் தேடியும் சிறுவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் காலை மீண்டும் மீட்பு பணியில் ஈடுபட்ட போது 40 வயது மதிக்க தக்க ஆண் சடலம் கண்டெடுக்கபட்டுள்ளது. அந்த நபர், மது போதையில் உள்ளே விழுந்து இறந்தாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்