

சென்னையில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில், மலேசிய சபாநாயகர் விக்னேஷவரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புரசைவாக்கத்தில், தமிழர் எழுச்சி நாள் கொண்டாடப்பட்டது. இதில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்தியராஜ், பேராசிரியர் சாலமன் பாப்பையா, மலேசிய சபாநாயகர் விக்னேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.