மாணவியை தாக்கிவிட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞர் - மாஜிஸ்திரேட் விசாரணை
சேலத்தில் காதலியை கத்தியால் குத்திவிட்டு இளைஞர் தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில் மாஜிஸ்திரேட் நேரில் விசாரணை மேற்கொண்டார். வீரபாண்டி அருகே உள்ள இனாம் பைரோஜ் பகுதியை சேர்ந்த மோகன பிரியன், மின்னாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த அரசு கலைக் கல்லூரி மாணவியுடன் இன்ஸ்டாகிராமில் பழகி, 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளார். தனக்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் ஆக உள்ளதாக அந்த மாணவி கூறியதால் ஆத்திரமடைந்த மோகன பிரியன், அவரை கத்தியால் குத்திவிட்டு, தானும் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் சேலம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் திருமால் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
Next Story

