தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை - ஸ்டாலின்
தி.மு.க. தலைவர் ஸ்டாலின், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று பிரசாரத்தை தொடங்கினார்.
"100 நாள் வேலை திட்டம் முறைப்படுத்தப்படும்"
வேலூர் தொகுதியில் திமுக வெற்றி பெற்றால் நுாறு நாள் வேலை திட்டம் முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து வாணியம்பாடியில் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்ட அவர், தகுதி உள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
