ஜூலை 1ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் - எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு

வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட போவதாக எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஜூலை 1ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் - எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு
Published on

நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்ட செயல்பட்ட தென்னிந்திய எல்பிஜி டேங்கர் லாரிகள் உரிமையாளர் சங்கத்தில் 5400 எல்பிஜி டேங்கர் லாரிகள் உள்ளன. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசின் எண்ணை நிறுவனங்கள் நிர்ணயம் செய்யும் வாடகை மூலம் 4700 எல்பிஜி டேங்கர் லாரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், மீதமுள்ள 700 எல்பிஜி டேங்கர் லாரிகளுக்கு இன்னும் வேலை தராததால் புதிய வாடகை நிர்ணயம் செய்து டெண்டர் விட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி முதல் காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com