வாங்காத டிராக்டருக்கு லோன் கட்ட வற்புறுத்தல்? - ஆட்டோ டிரைவர் தற்கொலை

x

வேடசந்தூர் அருகே வாங்காத டிராக்டருக்கு தவணை கட்டச் சொல்லி தனியார் நிதிநிறுவன ஊழியர்கள் மிரட்டியதால் ஆட்டோ ஓட்டுனர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோடாங்கிபட்டியை சேர்ந்த முருகன் என்பவரை, தனியார் டிராக்டர் கம்பெனி விற்பனையாளர்கள் ஆசை வார்த்தை கூறி, டிராக்டர் வாங்குவதற்கான ஆவணங்களில் கையெழுத்து பெற்றதாக கூறப்படுகிறது. பின்பு, அவர் ஷோரூமில் இருந்து டிராக்டரை எடுக்க மறுத்த நிலையில், ஒட்டன்சத்திரம் தனியார் நிதி நிறுவன ஏஜென்ட்கள், டிராக்டர் நிறுவன ஊழியர்கள் ஆகியோர் மொத்தம் 2 லட்சத்து 8 ஆயிரம் ரூபாயை கட்ட வேண்டும் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த ஆட்டோ டிரைவர் முருகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்