லீக்கான சிலிண்டர்... பற்றியெரிந்த பேக்கரி... பரபரப்பு காட்சி

x

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கேஸ் சிலிண்டர் கசிவால் பேக்கரி கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வடமதுரையில் உள்ள நால்ரோடு பகுதியில் திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் செயல்பட்டு வந்த பேக்கரியின் சமையலறையில் இருந்த கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பற்றியது.

இதனை கண்ட கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இந்த விபத்தில் பேக்கரி முற்றிலும் எரிந்து நாசமான நிலையில், பேக்கரிக்கு எதிரே நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் ஒன்றும் முழுவதுமாக தீ பற்றி எரிந்து சாம்பலானது.


Next Story

மேலும் செய்திகள்