ஹரிஹரபுத்திரர் அய்யனார் கோயிலில் கும்பாபிஷேக விழா

x

Perambalur Kovil Kumbabishekam | ஹரிஹரபுத்திரர் அய்யனார் கோயிலில் கும்பாபிஷேக விழா | பக்தர்கள் உற்சாகக் கொண்டாட்டம்..

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ஒகளூர் கிராமத்தில் ஆயிரத்து 300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பூர்ணா புஷ்கலா சமேத ஸ்ரீ ஹரிஹரபுத்திரர் அய்யனார் சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

இந்த கோயிலில் உள்ள ஸ்ரீ பாலவிநாயகர், ஸ்ரீநவசக்தி, ஸ்ரீசெம்மலையப்பா, ஸ்ரீபூமாலையப்பா, ஸ்ரீபச்சையம்மன், ஸ்ரீசெல்லியம்மன், உள்ளிட்ட சுவாமி சிலைகள் புதுப்பிக்கப்பட்டு கடந்த ஜூன் 4ம் தேதி காலை ஸ்ரீ மஹாகணபதி ஹோமம், ஸ்ரீ மஹாலட்சுமி ஹோமங்களுடன் மஹா தீபராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து 5ம் தேதி மங்கள இசைகளுடன், வேத பாராயணம் பாடப்பட்டு யாக பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து இன்று கோ பூஜை, நாடிசந்தானம், தத்வார்ச்சனை, திரவிய ஹோமம், பூர்ணாஹீதி, நடைபெற்றது. பின்னர் யாக சாலையில் இருந்து கும்பங்கள் எடுத்து வரப்பட்டு மேல் விமான கோபுரம் மற்றும் மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்கார பூஜைகள் மற்றும் தீபாராதனை ஆகியவை நடைபெற்றவுடன்,

பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்