உணர்ச்சியில் தொண்டரை தாக்கிய அழகிரி - மனம் வருந்தி தொண்டரிடம் வருத்தம் தெரிவிப்பு

உணர்ச்சி வசப்பட்டு தொண்டரை தாக்கியதற்காக மனம் வருந்திய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி, அந்த தொண்டரின் வீட்டிற்குச் சென்று வருத்தம் தெரிவித்துள்ள சம்பவம் அந்த கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று அரக்கோணத்தில் ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்களை கூட்டத்தில் அழகிரி கலந்து கொண்டார்.. கூட்டம் முடிவடைந்த உடன் தன்னால் தாக்கப்பட்ட நரேசின் வீட்டிற்கு சென்றார் .. திடீரென்று தமது வீட்டிற்கு வந்த கட்சித் தலைவரைப் பார்த்து நரேஷ் திக்கு முக்காடிப் போனார்.. நரேசுடன் அவர்ந்து சிறிது நேரம் பேசிய அழகிரி , அன்றைய நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்றார் . அழகிரியின் இந்த செயலைப் பார்த்து காங்கிரஸ் தொண்டர்கள் நெகிழ்ந்து போய் உள்ளனர்

X

Thanthi TV
www.thanthitv.com