தொழிலாளிடம் ரூ.15,000 வழிப்பறி செய்த முகமூடி கொள்ளையர்கள் : போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, இரு சக்கர வாகனத்தில் வந்த தொழிலாளியை தாக்கிய முகமூடி கொள்ளையர்கள், 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை வழிப்பறி செய்தனர்.
தொழிலாளிடம் ரூ.15,000 வழிப்பறி செய்த முகமூடி கொள்ளையர்கள் : போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, இரு சக்கர வாகனத்தில் வந்த தொழிலாளியை தாக்கிய முகமூடி கொள்ளையர்கள், 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை வழிப்பறி செய்தனர். இதனையடுத்து ரத்த காயங்களுடன்

துடித்து கொண்டிருந்த தொழிலாளி லட்சுமி நாராயணனை அருகில் இருந்தவர்கள், மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முகமூடி கொள்ளையர்கள் பள்ளிக்குள் புகுந்த தலைமை ஆசிரியரை தாக்கி நகைகளை கொள்ளையடித்தனர். இதே போல் இன்றும் முகமூடி கொள்ளையர்கள் வழிப்பறியில் ஈடுபட்டது குறித்து வழக்கு பதிவு செய்த தளி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com