மோட்டர் சைக்கிள்கள் மோதி விபத்து : விபத்தில் விழுந்தவரை கத்தியால் குத்தி ரூ.30 லட்சம் வழிப்பறி

கோவை கருமத்தம்பட்டி அருகே விபத்தில் சிக்கிய இளைஞரை கத்தியால் குத்தி, 30 லட்சம் ரூபாய் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மோட்டர் சைக்கிள்கள் மோதி விபத்து : விபத்தில் விழுந்தவரை கத்தியால் குத்தி ரூ.30 லட்சம் வழிப்பறி
Published on

அவினாசி பகுதியை சேர்ந்த தமிழரசன், சிவராஜ் கோவையை சேர்ந்த தர்ஷன், ராகுல்குமார் ஆகியோர் இருசக்கர வாகனங்களில் கோரவை சென்றுள்ளனர். அவர்களது பைக்குகள் மோதிக்கொண்ட நிலையில், நால்வரும் கீழே விழுந்து விபத்தில் சிக்கினர். இந்த நேரத்தில், இவர்களை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள், ராகுல்குமாரின் முதுகில் கத்தியால் குத்திவிட்டு, அவர் வைத்திருந்த 30 லட்சம் ரூபாயை பறித்துச் சென்றுள்ளனர். காயமடைந்த நால்வரையும், அவ்வழியாக வந்த பொதுமக்கள் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராகுல்குமார் கோவை அரசு மருத்துவமனையிலும், மற்ற மூவரும் ஒண்டிப்புதூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டள்ளனர். ராகுல்குமார் கொண்டுவந்த பணம் யாருடையது, விபத்து இயல்பானதா? போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com