கோத்தகிரி டூ லண்டன் - கால்பந்தில் சாதிக்க துடிக்கும் 15 வயது சிறுவன்

x

நீலகிரியைச் சேர்ந்த தேயிலை விவசாயியின் 15 வயது மகன், புகழ்பெற்ற இங்கிலாந்து கால்பந்து கிளப் ஒன்றில் 6 மாத பயிற்சியை பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோத்தகிரி அருகே உள்ள மலை கிராமத்தை சேர்ந்த தேயிலை விவசாயி சரவணகுமார் - உமா மகேஸ்வரி தம்பதியின் மகனான பவிஷ் குமார், கடந்த சில நாட்களுக்கு முன் தேசிய அளவில் நடைபெற்ற 15 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான ஹை லீக் போட்டியில் கர்நாடக மாநில அணிக்காக பங்கேற்று விளையாடினார். இந்நிலையில் தற்போது இங்கிலாந்து நாட்டில் உள்ள புகழ்பெற்ற கால்பந்து அணியான டாட்டிங்ஹாம் அணி, இவருக்கு 6 மாத கால்பந்து விளையாட்டு பயிற்சி அளிக்க அவரை தேர்வு செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்