ரசாயன மணலை கொட்டி சென்ற மர்மநபர்கள் : தீப்பொறிகள் பறப்பதால் கிராம மக்கள் அச்சம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் ரசாயனம் கலந்த மணலை மர்மநபர்கள் கொட்டி சென்றுள்ளனர்.
ரசாயன மணலை கொட்டி சென்ற மர்மநபர்கள் : தீப்பொறிகள் பறப்பதால் கிராம மக்கள் அச்சம்
Published on
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் ரசாயனம் கலந்த மணலை மர்மநபர்கள் கொட்டி சென்றுள்ளனர். அந்த மணல் மீது எந்த பொருளை போட்டாலும் பொசுங்கி கருகி விடுகின்றன. இரவு நேரத்தில் அம்மணலில் இருந்து தீப்பொறிகள் பறப்பதால் அப்பகுதியில் உள்ள புண்ணியம் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட வட்டாட்சியர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். ரசாயன மணலை கொட்டி விட்டு சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com