கொடைக்கானலில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு

முகமது சமீரின் மனைவி தான் அவரை தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கொடைக்கானலில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு
Published on
கொடைக்கானல் மலை சாலையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஒரு ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் அந்த நபர் கர்நாடகா மாநிலம் மங்களூரை சேர்ந்த முகமது சமீர் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் முகமது சமீரின் மனைவி தான் அவரை தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com